சபரிமலை தங்கம் அபகரிப்பு... முதற்கட்ட விசாரணை அறிக்கை கோர்ட்டில் தாக்கல்!
சபரிமலை அய்யப்பன் கோவிலின் துவார பாலகர் சாமி சிலை மற்றும் கோவில் கதவுகளில் பதிக்கப்பட்ட தங்கக் கவசங்களை புதுப்பிக்கும் பெயரில் 2019-ம் ஆண்டு வெளியே கொண்டு சென்ற போது சுமார் 100 பவுன் தங்கம் அபகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள், இடைத்தரகராக செயல்பட்ட உன்னிகிருஷ்ணன் போற்றி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உன்னிகிருஷ்ணன் போற்றி கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா ஐகோர்ட்டின் உத்தரவால் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது. ஐகோர்ட்டு 6 வாரங்களுக்குள் விசாரணை முடிக்கவும், 2 வாரங்களில் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் சிறப்பு விசாரணைக் குழு தீவிர விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில், முதற்கட்ட விசாரணை அறிக்கை இன்று கேரள ஐகோர்ட்டில் நீதிபதிகள் விஜயராகவன், விஜயகுமார் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் இல்லாமல் தனி அறையில் வீடியோ பதிவுகளுடன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, முதற்கட்ட அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளிவர உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!