undefined

சபரிமலை தங்கத் திருட்டு விவகாரம் ... முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி கைது! 

 

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பதிக்கப்பட்டிருந்த தங்கத்தகடுகள் மாயமான வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் அர்ச்சகராக பணியாற்றிய உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டுள்ளார்.திருவனந்தபுரத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் 10 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய பிறகு, அவரை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் மற்றும் கோயில் கதவுகளில் இருந்த தங்கத்தகடுகள் பழுதுபார்க்கும் பெயரில் சென்னைக்கு அனுப்பப்பட்டபோது பெருமளவு தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. தேவசம் போர்டு விஜிலன்ஸ் நடத்திய ஆரம்ப விசாரணையில் திருட்டு நடந்தது உறுதியாகியதைத் தொடர்ந்து, கேரள உயர்நீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.

ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையிலான அந்தக் குழு கடந்த சில வாரங்களாக ஐதராபாத் மற்றும் சென்னையில் தீவிர விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் முன்னாள் அர்ச்சகர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீது சந்தேகம் எழுந்தது.இதுவரை தேவசம் போர்டு அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், உன்னிகிருஷ்ணன் போத்தி உட்பட 10 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?