சரஸ்வதி பூஜை... இப்படி வழிபட்டால் குழந்தைகளின் கல்வி மேன்மையடையும்!
வீடு, அலுவலகம், தொழில்சாலைகளின் முகப்பில் வாழைக்கன்றுகள், மாவிலை தோரணங்கள் கட்ட வேண்டும். சரஸ்வதி பூஜை தினத்தன்று காலையில் சரஸ்வதி படத்தை அலங்கரித்து, விளக்கேற்றி பூஜை முறைகளை செய்ய வேண்டும்.
வெண்ணெய், பால், தயிர், பாகுவெல்லம், தேன், மோதகம், வடை, கதம்ப சாதம் இவைகளில் ஏதாவது ஒன்றை தயார் செய்து படைக்கலாம். அம்பிகைக்கு உகந்த மலர்களான செம்பருத்தி, ரோஜா, வெண்தாமரையில் மாலைகள் தொடுத்து அன்னைக்கும், புத்தகங்களுக்கும் அணிவிக்க வேண்டும்.
காலையில் எழுந்து வீடு சுத்தம் செய்து வாசல் மற்றும் பூஜை அறையில் மாக்கோலம் இட வேண்டும். வீட்டை தோரணங்களாலும், பூஜை அறையை மலர்களாலும் அலங்கரிக்க வேண்டும். புத்தகங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு சந்தனம், குங்குமம் இட வேண்டும். மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.பூஜை அறையில் நடுவில் நான்கு இதழ்களும் சுற்றிலும் எட்டு இதழ்களும் கூடிய தாமரை கோலமிட வேண்டும்.
தாமரையின் நடுவில் ஓம் என்றும், எல்லா இதழ்களிலும் ஐம் என்றும் எழுத வேண்டும். கோலத்தின் நடுவில் குத்துவிளக்கு அல்லது காமாட்சி விளக்கும் நான்கு மற்றும் எட்டு இதழ்களில் அகல் விளக்குகளும் ஏற்றி வைக்க வேண்டும். பூஜைகள் நல்லபடியாக அமைய முழுமுதற்கடவுளாம் விநாயகரை வணங்கி குலதெய்வத்தை மனதார பிரார்த்திக்க வேண்டும்.
சரஸ்வதி ஸ்லோகங்கள், நாமாவளிகள், பாடல்கள், அம்பிகை துதிகள், பாடல்கள் பாடலாம். நைவேத்தியமாக பால் கற்கண்டு சாதம் , இனிப்பு வகைகள் செய்யலாம். பாசிப்பருப்பு சுண்டல் செய்வது கூடுதல் சிறப்பு. இயன்ற அளவு சுமங்கலிகளுக்கு சந்தனக்கலர் ரவிக்கை துணிகள் , மஞ்சள், குங்குமம், மங்கலப்பொருட்கள் வழங்கலாம். ஆரத்தி எடுத்து தீபத்தை பூஜையறையில் சேர்த்து நிறைவு செய்யலாம்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!