சரத்குமார் சென்ற கேரவன் சொகுசு பேருந்தில்  மோதி  விபத்து...13 பேர் படுகாயம்!

 

தமிழ் திரையுலகில் சுப்ரீம் ஸ்டாராகவும்,  சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமாகவும் இருந்து வருபவர் நடிகர்  சரத்குமார். இவர்  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில்  அவரது குலதெய்வமான ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் சென்றிருந்தார்.சரத்குமாருடன்  மனைவி நடிகை ராதிகா, மகள் நடிகை வரலட்சுமியும் சென்றிருந்தனர்.  குலதெய்வ வழிபாட்டுடன் அதே பகுதியில் அமைந்துள்ள  மேலும் சில கோயில்களுக்கும் சரத்குமார் சாமி தரிசனம் செய்வதற்காக சென்றிருந்தார்.  இதற்காக கேரவனும்   வரவழைக்கப்பட்டிருந்தது.


சரத்குமார் குடும்பத்தினர்  கோயிலுக்கு வந்த பின்பு   கேரவன் திண்டுக்கல்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது இந்த கேரவன் திரும்பி  திருப்பத்தூர் அருகே கேரவன் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த பேருந்தின் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில்  பேருந்தில் பயணம் செய்த   12 பேர் படுகாயமடைந்தனர். கேரவனில் இருந்த ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.  
உடனடியாக படுகாயம் அடைந்தவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் கும்பாபிஷேக விழாவில் சிறிது நேரம் பெரும்   பரபரப்பை ஏற்படுத்தியது.கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு அந்தப் புகைப்படங்களைப் பதிவிட்ட சரத்குமார்  , ‘என் தந்தை பிறந்த தளக்காவூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில் மற்றும் சிராவயல் கிராமத்தில் பிரதிஷ்டை செய்திருக்கும் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயிலின் அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக நிகழ்வில்  கலந்து கொண்டேன்.

குடும்பத்தாரின் அழைப்பை ஏற்று நேற்றும், இன்றும் கலந்து கொண்ட சொந்த பந்தங்களுக்கும், ஆலய பங்காளிகளுக்கும், கிராமத்து பெரியவர்களுக்கும், ஊர் பொதுமக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி “ என கூறியிருந்தார்.  விழா நிறைவடைந்ததும்  சரத்குமாரிடம் மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  “தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி அமைப்பது குறித்து  நாளை பிப்ரவரி  24ம் தேதி திருச்சியில் நடைபெறும் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பின்னர் முடிவு செய்யப்படும். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவதா, வேண்டாமா என்பது குறித்தும் நாளை அறிவிக்கப்படும் “ என   பதிலளித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!