கனமழையால் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!
Nov 6, 2025, 09:24 IST
வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதால், தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் அடிப்படையில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
காலை முதலே திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகள் செயல்படுவது சிரமமாக இருப்பதாகக் கருதப்பட்டதால், மாணவர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
கனமழை காரணமாக இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை திருப்பத்தூர் ஆட்சியர் சிவசௌந்தரவள்ளி வெளியிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!