undefined

திமுக கவுன்சிலருக்கு அரிவாள்வெட்டு!! பரபரக்கும் அரசியல் வட்டாரம்!!

 

தஞ்சை மாவட்டம் திருவையாறில் வசித்து வருபவர்  கிருபானந்தம். இவர் திமுக கவுன்சிலர்.  தஞ்சையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே இவரும், அப்புவும் சென்று கொண்டிருந்த போது  சிலருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றியதில்  கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்பு ஆகியோர் அரிவாளால் வெட்டப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த காவல்துறையினர்  கவுன்சிலர் கிருபானந்தம் மற்றும் அப்புவை அரிவாளால் வெட்டிய திருவையாறில் வசித்து வரும்  துளசிராமன், நடேசன், அருண், சதீஷ் 4 பேரை கைது செய்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு  மோதலுக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை