பரபரப்பு வீடியோ... வீல் சேரில் மயங்கிய நிலையில் செந்தில் பாலாஜி!!

 

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.  காவேரி மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டு   அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் காவலில் எடுத்தும் விசாரித்தனர். பிறகு மறுபடியும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு 3 மாதங்களாகும் நிலையில், அவரது நீதிமன்ற காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது.  ஜுன் 14ம் தேதி கைது செய்யப்பட்டவுடன் அடுத்த 14 நாட்கள் அவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி முதல் நீதிமன்ற காவல் ஜுன் 28ம் தேதி வரை எனக் கூறப்பட்டது.   2வது முறையாக ஜூலை 12 வரை காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு பின்   ஜூலை 26-ம் தேதி வரையில் 3வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

காவல்துறையினர் உடனடியாக சிறையில் உள்ள மருத்துவர்களை அணுகி அங்கு அவரது உடல்நிலை கண்காணித்தனர். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 6.45 மணிக்கு  ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.மேலும் செந்தில் பாலாஜிக்கு நடைபெற்ற இருதய அறுவை சிகிச்சையின் போது அவரது கால்களில் இருந்த நரம்புகள் எடுக்கப்பட்டு அறுவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டன.  கால்களில் நரம்புகள் எடுக்கப்பட்ட பகுதிகளில் செந்தில் பாலாஜிக்கு அதிக வலி இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது , இந்த சிகிச்சைகள் முடிந்த பிறகே, மருத்துவ சிகிச்சையை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே தொடர்வதற்கான  தேவை இருக்கிறதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!