“அன்புமணி மாதிரி ‘அ’லயே வச்சுறட்டுமா?” கோயிலில் குழந்தைக்கு பெயர் சூட்டிய சௌமியா!
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள புகழ்பெற்ற பூவராக பெருமாள் கோவிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி தரிசனம் செய்தார்.
அந்த நேரத்தில் கோவிலுக்கு வந்த தம்பதியர் தங்களது புதிதாக பிறந்த கைக்குழந்தைக்கு பெயர் வைக்கச் சௌமியா அன்புமணியிடம் கேட்டனர். அவர்களின் மனப்பூர்வமான கோரிக்கையை ஏற்று குழந்தையை ஆசையுடன் கையில் எடுத்த சௌமியா அன்புமணி, குழந்தைக்கு “அமுத நிலை” எனப் பெயர் சூட்டினார்.
பின்னர் மூன்று முறை குழந்தையின் பெயரை சிரித்தபடி கூறிய அவர், தம்பதியருக்கு ஆசீர்வாதம் வழங்கினார். இதையடுத்து, பெற்றோர் மகிழ்ச்சியுடன் “அன்புமணி மாதிரி ‘அ’லயே வச்சுறட்டுமா?” என சிரித்தபடி கூறியதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி, அனைவரும் சௌமியா அன்புமணியுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!