undefined

டிக்கெட் நகலை பகிருங்க..... ஆர்.ரகுமான் ட்வீட்!!

 

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  முடியாதவர்கள் டிக்கெட் நகலை பகிர்ந்து கொள்ளுமாறு  ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இதுகுறித்து  ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “ அன்பான சென்னை மக்களே, டிக்கெட் வைத்திருந்தும் துர்திருஷ்டவசமான சூழ்நிலையால் நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்குள் நுழைய முடியாதோர்   டிக்கெட் நகலை arr4chennai@btos.in அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்கள் குழு விரைவில் பதிலளிக்கும்' என தெரிவித்துள்ளார்.

இதனை நேரில் கண்டு ரசிக்க   காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் பலரால் நிம்மதியாக உட்கார்ந்து நிகழ்ச்சியை பார்க்க முடியவில்லை.  டிக்கெட்டின் விலை ரூ5000, ரூ6000 என வசூலிக்கப்பட்டும் மைதானத்தில் நுழைய முடியாத அளவுக்கு கட்டுக்கடங்காத கூட்டம்.  இதனால்  கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழுந்துள்ளனர். இந்நிகழ்ச்சியால் சென்னை ஓ.எம்.ஆர் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காசு கொடுத்தும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பிவிட்டனர்.   நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்ததே இந்த குளறுபடிக்கு காரணம் என்கின்றனர் காசு கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை