அதிர்ச்சி... இந்தாண்டு இந்தியா முழுவதும் 42 ரேபிஸ் தொற்றால் மரணம்... மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் நடப்பாண்டில் இதுவரை 42 ரேபிஸ் தொற்று நோயால் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி வரை நாட்டில் 45.50 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி நகராட்சி கவுன்சிலர் முகமது நவ்மன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய அரசின் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு மையம் பதிலளித்துள்ளது.
அந்த பதிலில், ““இந்தியாவில் 2024-ம் ஆண்டில் 13 ஆக இருந்த ரேபிஸ் தொற்று மரணங்கள், 2025-ம் ஆண்டின் 9 மாதங்களில் 42 ஆக அதிகரித்துள்ளது. 2024 ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ந்தேதி வரை நாட்டில் 45.50 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 6.05 லட்சம் சம்பவங்கள் நடந்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!