‘டியூட்’ திரைப்பட விழாவில் அதிர்ச்சி... மும்பை நடிகைக்கு பாலியல் தொல்லை... காவல் நிலையத்தில் புகார்!
டியூட் திரைப்படத்தின் விழாவில் கலந்துக் கொள்ள மும்பையில் இருந்து வந்திருந்த துணை நடிகைக்கு, காரில் சென்றுக் கொண்டிருந்த போது, கார் ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது திரைத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக நடிகைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு இருப்பதாக தங்களது அதிருப்தியைத் தெரிவித்தனர்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் ‘டியூட்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 13ம் தேதி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் தொகுப்பாளராகச் செயல்படுவதற்காக, புனேவை சேர்ந்த துணை நடிகை ஆஸ்தா (20) கடந்த 11ம் தேதி சென்னை வந்து, பெரியமேட்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.
இசை வெளியீட்டு விழா நடைபெறும் தாம்பரத்திற்கு செல்வதற்காக அவர் தனியார் நிறுவனத்திடம் இருந்து வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்து சென்றதாக கூறப்படுகிறது. பயணத்தின் போது, அந்த காரை ஓட்டிய கணேஷ் பாண்டியன் என்ற ஓட்டுநர், ஆஸ்தாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு ஐந்து நாட்கள் கழித்து, ஆஸ்தா பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகத்தைச் சேர்ந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!