பெங்களூருவில் அதிர்ச்சி... சாலையோரத்தில் பச்சிளம் குழந்தை சடலம்!
பெங்களூரு ஊரக மாவட்டம் ஒசகோட்டை பகுதியில் பிறந்த சில மணி நேரம்தான் ஆன பெண் குழந்தை சாலையோரத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலையின் பக்கத்தில் பச்சிளம் குழந்தை கிடப்பதை பாதசாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றினர்.
பின்னர் குழந்தையின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தை உயிருடன் வீசப்பட்டதா அல்லது இறந்த நிலையில் தள்ளி விடப்பட்டதா என்ற இரண்டு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கண்டறிவதற்காக, அப்பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் சமீபத்தில் சிகிச்சை பெற்ற கர்ப்பிணி பெண்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அருகிலிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
பச்சிளம் குழந்தை சடலமாக கிடைத்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இந்த கண்கலங்கவைக்கும் சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கண்டறிவேன் என தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!