மதுரையில் அதிர்ச்சி... 10ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!
மதுரையில் 10ம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாட்டுத்தாவணி அருகே சம்பக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கிருத்திகா என்பவருடன் வசித்து வந்தவர், அவரது மகன் யுவன் (15). பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த இவர், திறமையான துப்பாக்கி சுடும் வீரராக விளங்கியுள்ளார். பல மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற அனுபவமும் அவருக்கு உண்டு.
இந்நிலையில் நேற்று பிற்பகல் வீட்டிலிருந்த போது யுவன் திடீரென தனது ‘ஏர்கன்’ துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கி சத்தம் கேட்டதும் அதிர்ச்சியடைந்த தாயும் அக்கம்பக்கத்தினரும் உடனே விரைந்து பார்த்தபோது யுவன் உயிரிழந்திருந்தார்.
தகவல் அறிந்த மாட்டுத்தாவணி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். யுவனின் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
யுவன் தற்கொலைக்கு துல்லியமான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், குடும்பத்தினர் மத்தியில் தகராறு இருந்து வந்ததால் சமீபத்தில் மனஅழுத்தத்தில் இருந்தாரா, கல்வி அல்லது குடும்ப பிரச்சனைகள் ஏதேனும் இருந்ததா என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திறமையான இளம் சுடும் வீரர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், மதுரை முழுவதும் துயரத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!