அதிர்ச்சி.. திருப்பதி பல்கலைக்கழக வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம்... பீதியில் மாணவர்கள்!
திருப்பதி அருகே, திருமலை தேவஸ்தானம் நிதியுதவியுடன் இயங்கும் ஸ்ரீவெங்கடேஸ்வரா வேத பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3 நாட்களாக சிறுத்தை நடமாட்டம் நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அந்த சிறுத்தை திரிந்துவருவதாக உள்ளூர் மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக காவலாளி ஒருவர் சிறுத்தையின் வீடியோவையும் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!