அதிர்ச்சி... டிசிஎஸ் நிறுவனத்தில் 30,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு!

 

டிசிஎஸ் நிறுவனத்தில் 30,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ள நிலையில், நிச்சயமற்ற தன்மை மற்றும் பதற்றத்தை எதிர்கொண்டு உள்ளனர். இந்நிலையில் இதன் தாக்கம் டிசிஎஸ் பணியாளர்களில் 2 சதவீத பேருக்கு மட்டுமே என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் (TCS) தனது பணியாளர்களில் 2 சதவீதம் (சுமார் 12,000 க்கும் மேற்பட்டவர்கள்) குறைக்கும் என்று டிசிஎஸ் தலைவர் K. கிருத்திவாசன் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு கூறியிருந்த நிலையில், பணிநீக்க அலை அனைத்து ஊழியர்களிடமும் உணரப்படுகிறது. கடந்த சில வாரங்களாக கட்டாய மற்றும் திடீர் ராஜினாமாக்களின் அலைக்கு அந்நிறுவனத்தில் நிச்சயமற்ற தன்மை மற்றும் பதட்டம் அதிகரித்துள்ளது. 

ஐடி தொழிற்சங்கங்கள், ஊழியர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் பணிநீக்கம் செய்யப்படும் நபர்களின் உண்மையான எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டதை விட மிக அதிகம் என்று எண்ணுகிறார்கள். வேலையிழப்போர் எண்ணிக்கையை உறுதிப்படுத்த முடியாவிட்டாலும், பல வட்டாரங்கள் விசாரித்த வகையில் அந்நிறுவனத்தில் இருந்து 30,000 க்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

"கடந்த ஜூன் மாதத்திலிருந்து சுமார் 10,000 பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அணுகியுள்ளனர். பணிநீக்கங்கள் எளிதாக 30,000யை தாண்டக்கூடும். ஊழியர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாலும், நிறுவனத்தால் பணிநீக்கம் செய்யப்படாததாலும், இந்த எண்கள் டிசிஎஸ் நிறுவனத்தின் பதிவுகளில் வெளிபடாது. ஒருவேளை அவர்களின் பணிநீக்க புள்ளிவிவரங்களில் மட்டுமே இருக்கலாம்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஐடி நிறுவன தொழிற்சங்கங்களில் ஒன்றின் ஊழியர் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக, அகில இந்திய ஐடி & ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் (AIITEU), ஐடி ஊழியர்களுக்கான மன்றம் (FITE), ஐடி & ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் (UNITE), கர்நாடக மாநில ஐடி/ஐடிஇஎஸ் ஊழியர்கள் சங்கம் (KITU) உள்ளிட்ட பல ஐடி ஊழியர் சங்கங்கள், டிசிஎஸ் நிறுவனத்தின் தொடர்ச்சியான பணிநீக்கங்களுக்கு எதிராக போராட்டங்களையும் பிரச்சாரங்களையும் நடத்தி வருகின்றன.

எனினும், டிசிஎஸ் நிறுவனத்திற்கு நெருக்கமான ஒருவர் இந்த தகவலை மறுத்து, தொழிற்சங்கங்களால் மேற்கோள் காட்டப்பட்ட ஏராளமான பணிநீக்கங்கள "அங்கீகாரம் பெறுவதற்காக உருவாக்கப்பட்ட கற்பனைக் கதை" என்று கூறினார். "இந்த யூகங்கள் அனைத்தும் தவறானவை.  முன்னர் தெரிவித்தபடி இதன் தாக்கம் எங்கள் பணியாளர்களில் 2 சதவீதத்தினருக்கு மட்டுமே" என்று டிசிஎஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?