undefined

ஷாக் வீடியோ.. பெட்ரோலுக்கு பணம் கேட்டதால் தகராறு.. ஊழியரை தட்டி தூக்கிய போலீஸ் சஸ்பெண்ட்!

 

கேரள மாநிலம் கண்ணூர் நகர காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய ஓட்டுநர் சந்தோஷ் குமார். இவர் சமீபத்தில் ஒரு பெட்ரோல் பங்கிற்கு தனது காரில் சென்றார். அப்போது பெட்ரோல் பங்கில் இருந்த ஊழியர் அனில், பெட்ரோல் நிரப்பி பணம் செலுத்துமாறு கூறினார். அப்போது பணத்தை தர மறுத்த அனிலிடம் சந்தோஷ்குமார் வாக்குவாதம் செய்தார்.

ஆனால் சந்தோஷ்குமார் அவரை காரில் இருந்து இறக்காமல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் காரில்  இழுத்துச்சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதில் காயமடைந்த அனில், கண்ணூர் டவுன் போலீசில் சந்தோஷ்குமார் மீது புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் டிரைவர் கே.சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் அஜித்குமார் தெரிவித்தார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!