undefined

பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து குதித்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் பலி!

 

பாராசூட் இல்லாமல் விமானத்தில் இருந்து கீழே குதித்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் ஜெஸ்டின் புல்லர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 35.

அமெரிக்காவின் டென்னசி மாகாணம் நாஷ்வில் நகரை சேர்ந்தவர் ஜெஸ்டின் புல்லர். இவர் விமானத்தில் இருந்து கீழே குதித்து சாகசம் செய்யும் ஸ்கை டைவிங் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ஜெஸ்டின், கடந்த சனிக்கிழமையன்று ஒருவருக்கு ஸ்கை டைவிங் பயிற்சி கொடுத்து வந்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் அந்த நபர் கீழே குதித்த நிலையில், ஜெஸ்டின் பாராசூட் இன்றி விமானத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் விமானத்தில் இருந்து மின்னல் வேகத்தில் கீழே விழுந்த ஜெஸ்டின், தரையில் மோதிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெஸ்டினிடம் பயிற்சிக்கு பெற வந்திருந்த நபரின் பாரசூட் மரக்கிளையில் சிக்கியதால் அவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மரக்கிளையில் சிக்கிய நபரை மீட்டனர். தரையில் விழுந்து உயிரிழந்த ஜெஸ்டினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?