காலில் பாம்பு கடித்து இளைஞர் பரிதாபப் பலி!
தமிழகத்தில் கோவை மாவட்டம் இடையர் பாளையம் பகுதியில் வசித்து வருபவர் 44 வயது முரளி. இவர் 15 ஆண்டுகளாக பாம்பு பிடிக்கும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கோவை காளப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரின்டிங் நிறுவனத்திற்குள் 3 அடியில் பாம்பு புகுந்துவிட்டதாக தெரிகிறது. அதனை பிடிக்க முயற்சித்த முரளி இரவு சென்று பாம்பை பத்திரமாக மீட்டார்.
அப்போது எதிர்பாராதவிதமாக பாம்பு முரளியின் காலில் கடித்துவிட்டது. இதனையடுத்து முரளி சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா