நடுரோட்டில் படுத்து சமூக ஆர்வலர் போராட்டம்... குண்டுக்கட்டாக கைது செய்த போலீசார்!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சமூக ஆர்வலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இளையரசனேந்தல் ரோடு ரயில்வே சுரங்க பாலத்தின் இருபகுதியிலும் சர்வீஸ் சாலை அமைக்க வலியுறுத்தி நேற்று 5-வது தூண் அமைப்பு தலைவர் சங்கரலிங்கம் கையில் தேசியக் கொடியுடன் அப்பகுதிக்கு சென்றார். அவர் இளையரசனேந்தல் ரோடு ரயில்வே சுரங்க பாலத்தின் முன்பு ரோட்டில் பாய் விரித்து, தேசிய கொடியை கையில் ஏந்தி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை கைது செய்ய முயன்றனர்.
கைது செய்த போலீசாருடன் அவர் செல்ல மறுத்ததால், அவரை வலுக்கட்டயமாக குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!