undefined

செம க்யூட்.. ஷாலினி மீது அன்பைப் பொழியும் மகன் ஆத்விக்!

 
 

நடிகை ஷாலினி அஜித்குமார் மீது அவரது மகன் ஆத்விக் அன்பைப் பொழியும் க்யூட்டான புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் இந்த படம் வைரலாகி வருகிறது. 


கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை ஷாலினி உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவைசிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். ஷாலினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டதும், ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பை முடித்துக் கொண்டு அஜர்பைஜானில் இருந்து நேரே மருத்துவமனைக்கு விரைந்து சென்ற அஜித், ஷாலினியுடன் இருந்து கவனித்துக் கொண்டார். 


அறுவை சிகிச்சைக்குப் பின், குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆன ஷாலினி தற்போது நலமுடன் உள்ளார். அவருக்கு முத்தம் கொடுத்து அன்பைப் பொழிந்திருக்கிறார் ஆத்விக். இந்த க்யூட்டான புகைப்படத்தை ஷாலினி சமூகவலைதளத்தில் பகிர்ந்திருக்க அஜித் ரசிகர்கள் லைக்ஸ்களைத் தெறிக்க விட்டு வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!