சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதி!! தொண்டர்கள் அதிர்ச்சி!!

 

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி.இவர் திடீரென உடல் நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ராகுல் காந்தியின் தாயார்  சோனியா காந்திக்கு . லேசான காய்ச்சல் அறிகுறி காரணமாக திடீர் உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது.

உடனடியாக  டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.தற்போது  மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும், அவரது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணி வலுப்பெற்று வரும் நிலையில், சோனியா காந்தியின்  திடீர் உடல் நலக்குறைபாடு காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை