கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள்... தமிழகம் முழுவதும் 835 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
தமிழகத்தில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகளின் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைக்கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மாநிலம் முழுவதும் சிறப்புப் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற வார இறுதி நாட்களில் மட்டும் மொத்தம் 835 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோவை மற்றும் சேலம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு 335 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல் பெங்களூரு, கோவை மற்றும் திருப்பூர் போன்ற இடங்களிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் சிரமமின்றிப் பயணம் செய்ய ஏதுவாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூரம் பயணம் செய்யும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் இணையதளம் மூலமாகத் தங்களது பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். பேருந்துகளின் இயக்கம் மற்றும் விவரங்களை அறிந்து கொள்ளப் பிரத்யேக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!