எம்.ஆர்.ராதா மனைவி மறைவு... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

 

நடிகர் எம்.ஆர்.ராதா மனைவியும், நடிகைகள் ராதிகா, நிரோஷாவின் தாயாருமான கீதா ராதா உடல்நலக்குறைவால் நேற்று மாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மறைந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா மனைவியும், நடிகை ராதிகா-நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா காலமானார். அவருக்கு வயது 86. வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் நேற்று மாலை சென்னையில் காலமானார்.

இந்நிலையில், எம்.ஆர்.ராதா மனைவி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகவேள் எம்.ஆர்.ராதா மனைவி கீதா ராதா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பிரிவால் வாடும் சகோதரி ராதிகா சரத்குமார் உள்ளிட்ட குடும்பத்தினருக்கும், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?