கெத்து காட்டும் முதல்வர்... அமெரிக்க அதிபருடன் ஸ்டாலின்!!
ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, இந்தியா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, சவூதி அரேபியா, துருக்கி, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, தென் கொரியா, இத்தாலி, இந்தோனேஷியா, மெக்சிகோ, பிரேசில், துருக்கி, அர்ஜெண்டினா நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், இந்த இரவு விருந்து நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்தார். இரு தலைவர்களும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!