7 வருடங்களாக 10000 பிராண்டட் ஷூக்கள் திருட்டு... திருடர்களை தட்டித் தூக்கிய போலீசார்!
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் வித்யாரண்யபுரா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் வந்த 2 மர்ம நபர்கள் அருகிலுள்ள வீட்டுக்குள் குதித்து அங்கிருந்த ஷூக்கள் மற்றும் 2 சிலிண்டர்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினரிடம் இதுபற்றி புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர்.
அதில் 2 மர்ம நபர்கள் ஆட்டோவில் வந்து திருடி சென்றது தெளிவாக பதிவாகியிருந்தது. அதன்பின் காவல்துறையினர் அந்த ஆட்டோவின் விவரங்களை வைத்து அந்த மர்ம நபர்களை தேடி வந்தனர். அவர்களது வீட்டிற்கு சென்று அவர்களை சுற்றி வளைத்ததில் அதிர்ச்சி தரும் தகவல்கள் கிடைத்தன.அதன்படி அவர்களின் வீட்டில் 715 ஜோடிக்கும் மேல் பிராண்டட் ஷூக்கள் இருந்தன.
அதனின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கலாம் என்கின்றனர் காலணி தயாரிப்பாளர்கள். பறிமுதல் செய்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் விலை உயர்ந்த ஷூக்களை திருடி அதனை பல்வேறு இடங்களில் விற்பனை செய்ததாக கூறினர். அவர்களை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா