undefined

மாணவர்கள் போராட்டம் எதிரொலி... புதுச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் நீக்கம்!

 

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் நடத்திய கடுமையான போராட்டத்தின் பின்னர், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர் மாதவைய்யா பதவி நீக்கம் செய்யப்பட்டார்.காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர், பேராசிரியர் ஒருவரால் பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக அழுதபடி வெளியிட்ட ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி நிலவியது.

இதனை அடுத்து, பல்கலைக்கழகத்தில் எழுந்த பாலியல் புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், குற்றச்சாட்டில் உள்ள பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்திய மாணவர் சங்கம் கடந்த 9-ந்தேதி துணைவேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டம் நள்ளிரவு வரை நீடித்ததால், காலாப்பட்டு போலீசார் தடியடி நடத்தியதில் 24 மாணவ, மாணவிகள் கைது செய்யப்பட்டனர். இதனால் புதுச்சேரி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்த போராட்டத்தின் தாக்கமாக, காரைக்கால் வளாக தலைவர் மாதவைய்யா நீக்கப்பட்டதாகவும், அவரது பதவிக்கு தரணிக்கரசு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?