ஹோட்டலில் இரவு முழுவதும் காதலனுடன் தங்கிய மாணவி... காலையில் கார் விபத்தில் உயிரிழப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நர்சிங் மாணவி சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காதலருடன் ஹோட்டலில் தங்கிய பின்னர் திரும்பும் வழியில் துயரம்**பழனியை அடுத்த ஒட்டன்சத்திரம் பகுதியில், நர்சிங் பயிற்சிக்கு செல்லும் வழியில் நடந்த கார் விபத்தில் 22 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். டிண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சித்தூர் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரி, நத்தம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் இறுதி ஆண்டு பயின்று வந்தார்.
இவருக்கு வடமதுரை பகுதியில் ஸ்டூடியோ நடத்தும் நந்தகுமார் (23) என்பவருடன் இரண்டு ஆண்டுகளாக காதல் உறவு இருந்தது. இரண்டு நாள் விடுமுறைக்காக வீட்டிற்கு சென்ற புவனேஸ்வரி, நேற்றுமாலை மருத்துவமனை பயிற்சிக்காக இன்று காலை 7 மணிக்குள் செல்ல வேண்டும் என்று கூறி வீட்டில் இருந்து புறப்பட்டார்.
ஆனால் அவர் காதலருடன் பழனி சென்று தனியார் விடுதியில் தங்கியிருந்ததாக தகவல். இன்று காலை வேகமாக கல்லூரிக்கு திரும்பும் முயற்சியில் இருவரும் காரில் நத்தம் நோக்கி புறப்பட்டனர்.
காலை 6.30 மணியளவில் சத்திரப்பட்டி மாட்டுப்பாதை அருகே வளைவை கவனிக்காமல் காரை ஓட்டி வந்த நந்தகுமார் கட்டுப்பாட்டை இழந்ததால் வாகனம் தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே தலையில் கடும் காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். நந்தகுமார் சிறிய காயங்களுடன் தப்பினார்.
சத்திரப்பட்டி போலீசார் திடீர் மரணம் குறித்து வழக்கு பதிவு செய்து, உடலை ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து சூழ்நிலைகள் மற்றும் பயண விவரங்கள் குறித்து நந்தகுமாரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இளம் வயதில் உயிரிழந்த புவனேஸ்வரியை இழந்த துயரத்தில் குடும்பத்தினர் கண்கலங்க, இந்த சம்பவம் பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!