undefined

 சர்தார் - 2 படப்பிடிப்பில் பயங்கர விபத்து: ஸ்டண்ட் கலைஞர் மரணம்!

 

சென்னையில் நடந்து வரும் சர்தார் -2 படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு சண்டைக் கலைஞர் ஏழுமலை என்பவர் உயிரிழந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னையில் சர்தார் - 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. நடிகர்கள் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், சர்தார் -2 படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் விபத்தி ஏற்பட்டு, அவரது மார்பு பகுதியில் அடிபட்டு, நுரையீரலில் ரத்தகசிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மேற்கொண்டு  விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!