undefined

பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து ... 3 பெட்டிகள் தீயில் கருகி நாசம்!  

 
 

பஞ்சாப் மாநிலம் சிர்ஹந்தில் அமிர்தசரஸிலிருந்து சஹர்சாவுக்கு சென்ற பயணிகள் ரயிலில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ரயிலின் ஒரு பெட்டியில் இருந்து புகை எழுந்ததை கவனித்த அதிகாரிகள் உடனடியாக மற்ற பெட்டிகளைப் பிரித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தனர். இருப்பினும், கொழுந்து விட்டு எரிந்த தீ மூன்று பெட்டிகள் வரை பரவியது.

தீ விபத்தை உணர்ந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். புகை அதிகரித்ததால் சிலர் வெளியே குதித்தனர்; இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படாதது பெரும் அதிர்ஷ்டமாக அமைந்துள்ளது. தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?