திடீர் ட்விஸ்ட்... பழனிச்சாமி தான் எங்கள் எதிரி... ஒன்றாக இணைந்த ஓ.பி.எஸ்., டிடிவி., செங்கோட்டையன்... தேவர் ஜெயந்தி விழாவில் பரபரப்பு!
பழனிச்சாமி தான் எங்கள் எதிரி. பழனிச்சாமியை வீழ்த்தவே ஒன்றாக இணைந்துள்ளோம் என்று அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அல்லது, ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகிய 3 பேரும் இன்று தேவர் ஜெயந்தி விழாவில் ஒன்றாக இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக “ஓ.பன்னீர்செல்வத்துடன் எந்தத் தொடர்பும் கொள்ளக்கூடாது” என அதிமுக தலைமை தெளிவாக அறிவுறுத்தி இருந்த நிலையில், அந்த உத்தரவை மீறி செங்கோட்டையன் ஒரே காரில் ஓ.பி.எஸ்.ஸூடன் பயணித்து பசும்பொன் கிராமத்திற்கு சென்றார்.
அதன் பின்னர் ராமநாதபுரம் பசும்பொன் கிரமாத்தில் செங்கோட்டையன், டிடிவி தினகரன் கூட்டாக செய்தியார்களை சந்தித்தனர். அப்போது, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு தேவர் நினைவிடத்தில் சபதம் மேற்கொண்டுள்ளோம் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பிரிந்தவர்கள் ஒன்றிணைந்து அதிமுக ஆட்சியை கொண்டு வர சபதம் எடுத்துள்ளோம் என ஓபிஎஸ் கூறினார். இது கூட்டணியாக அறிவிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு பொறுத்திருங்கள் என்றும், உங்கள் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு தொடரும் எனவும் ஓபிஎஸ் பதிலளித்தார். துரோகத்தை வீழ்த்தவே நாங்கள் மூவரும் இணைந்துள்ளோம் என்று கூறிய டிடிவி தினகரன், சசிகலா வருவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கம் கொடுத்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!