சூப்பர் ... இனி 19 மொழிகளில் வாட்ஸ் அப் சேட்டிங்... !
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற செயலிகளில் முண்ணனியில் இருந்து வருவது வாட்ஸ் அப் செயலி. கோடிக்கணக்கான பயனர்களை தக்க வைக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் வகையிலும் வாட்ஸ் அப் அவ்வப்போது அப்டேட் செய்து வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் தவிர்க்க முடியாத செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் குறுஞ்செய்தி அனுப்பும் தளமாக முதலில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பிறகு வாட்ஸ் அப் செயலியை மெட்டா நிறுவனம் கையகப்படுத்திய பிறகு பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டு வருகிறது.
ஆடியோ, வீடியோ, பிடிஎப் பைல்கள் அனுப்பும் வசதி, வாட்ஸ் அப்பில் வீடியோக்கள், புகைப்படங்களை ஸ்டேட்டசாக வைக்கும் வசதி என பலப்பல அப்டேட்கள் அடுத்தடுத்து கொண்டு வரப்பட்டுள்ளன. ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது.
அதன்படி வாட்ஸ் அப் பயனர்கள் அனுப்பும் மெசேஜ் எந்த மொழியில் இருந்தாலும் அதை மொழிமாற்றம் செய்து தெரிந்த மொழியில் படிக்கும் வசதி விரைவில் அறிமுகம் ஆக உள்ளது. முதல் கட்டமாக ஆங்கிலம், இந்தி, அரபிக், ஸ்பானிஷ் உட்பட 19 மொழிகளில் இந்த சேவை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!