யூடியூபர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுங்க... நடிகர் வடிவேலு சர்ச்சை பேச்சு! 

 

இன்று செப்டம்பர் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னையில் 69வது நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த விழா தலைவர் நாசர் தலைமையில் 950க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த நடிகர்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் உட்பட 70 நட்சத்திரங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தேசிய விருது பெற உள்ள ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், ஜிவி பிரகாஷ் ஆகியோருக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. 

இந்த விழாவில் நடிகர் வடிவேலு பேசுகையில், “நமக்குள் ஒற்றுமை வேண்டும். பெரிய கலைஞர்கள், சின்ன கலைஞர்கள் என்று பார்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக் கொண்டு நம் கலைஞர்களைத் தவறாகப் பேசி, சிறிதளவு விஷயத்தை பெரிதளவு ஊதிப் பெரிதாக்கி விடுகிறார்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.  அவர்களுக்கு சீக்கிரமாக நடிகர் சங்கத்தின் சார்பில் ஆப்பு வைக்க வேண்டும். 

இந்தப் படத்தைப் பற்றி பேசு, அந்தப் படத்தைப் பற்றி பேசு என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் சிலர்கள் இதைச் செய்கின்றார்கள். இதற்கு நடிகர் சங்கத்திலும் சிலர் உடந்தையாக இருக்கின்றார்கள்.  இதனை நடிகர் சங்கத்தில் யாரும் கண்டிப்பதில்லை. இப்படிப் பேசி வருபவர்களைப் போர்க்கால அடிப்படையில் உண்டு இல்லாமல் ஆக்க வேண்டும்.

நடிகர் சங்கம் என்பது நடிகர்களைப் பாதுகாப்பது தான். திரைக்கு வெளியிலும் விட்டு வைக்காமல் படம் ஓடிக் கொண்டிருக்கும் போது விமர்சனம் எடுக்கிறார்கள். சினிமாவை 10 பேர் சேர்ந்து அழித்து வருகிறார்கள். ரோபோ சங்கர் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்று நான் ஊரில் இல்லை. ஒரு நாள் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவேன்” எனப் பேசியுள்ளார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?