undefined

தமிழ்நாடு திரைப்பட விருதுகள்.. முழு லிஸ்ட்... நயன்தாரா, ஆண்ட்ரியா உட்பட கலைஞர்களுக்கு உதயநிதி தலைமையில் விருது விழா! 

 

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட 2016-ஆம் ஆண்டு முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகளைத் தமிழக அரசு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 32 பிரிவுகளில் வழங்கப்படவுள்ள இந்த விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த பிரம்மாண்ட விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி 13ம் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்.ஜி.ஆர். அரசுத் திரைப்படப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் என அனைத்தும் ஒருங்கிணைத்து வழங்கப்பட உள்ளன.

சமூகச் சிந்தனை மற்றும் கலைத்தன்மை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள சில முக்கிய விருதுகளின் பட்டியல்:

சிறந்த திரைப்படங்கள் (ஆண்டு வாரியாக முதலிடம்): மாநகரம் (2017), அறம் (2018), பரியேறும் பெருமாள் (2019), அசுரன் (2020), ஜெய்பீம் (2021), கார்கி (2022)

சிறந்த நடிகர்கள்: தனுஷ், சூர்யா, விஜய் சேதுபதி, கார்த்தி, ஆர்.பார்த்திபன், ஆர்யா மற்றும் விக்ரம் பிரபு ஆகியோர் வெவ்வேறு ஆண்டுகளுக்கான சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சிறந்த நடிகைகள்: நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜோதிகா, மஞ்சு வாரியார், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் சிறந்த நடிகைகளுக்கான விருதுகளை வென்றுள்ளனர்.

சின்னத்திரை விருதுகள் (2014 - 2022): மக்களின் அன்றாட வாழ்வோடு இணைந்த சின்னத்திரை கலைஞர்களுக்கும் பல ஆண்டுகளுக்குப் பிறகு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நெடுந்தொடர்கள்: அழகி, ரோமாபுரி பாண்டியன், ராமானுஜர், நந்தினி, செம்பருத்தி, சுந்தரி, எதிர்நீச்சல் உள்ளிட்ட தொடர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த கதாநாயகர்கள்: ஆர்.பாண்டியராஜன், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ் உள்ளிட்டோர்.

சிறந்த கதாநாயகிகள்: ஆர்.ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சபானா ஷாஜகான், சைத்ரா உள்ளிட்டோர்.

விருதுகளுக்கான பரிசுத் தொகை விபரங்கள் விருது பெறுபவர்களுக்குச் சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுடன் பின்வரும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன.

திரைப்படங்கள்: முதல் பரிசு: ₹2 லட்சம், இரண்டாம் பரிசு: ₹1 லட்சம், மூன்றாம் பரிசு: ₹75,000

பெண்களை உயர்வாகச் சித்தரிக்கும் படம்: ₹1.25 லட்சம் (சிறப்புப் பரிசு)

நடிகர்/தொழில்நுட்பக் கலைஞர்கள்: 1 பவுன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

சின்னத்திரை: சிறந்த நெடுந்தொடர் (முதலிடம்): ₹2 லட்சம், ஆண்டின் சிறந்த சாதனையாளர்: ₹1 லட்சம், வாழ்நாள் சாதனையாளர்: ₹1 லட்சம், கலைஞர்கள்: 1 பவுன் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழ்.

கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த விருதுகளை ஒரே மேடையில் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது திரையுலக மற்றும் சின்னத்திரை கலைஞர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!