உடல் உறுப்புத் தானத்தில் உலகிலேயே தமிழ்நாடு முதலிடம்!
சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்த கொடையாளர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட “மகத்தான தியாகச் சுவர்” திறந்து வைக்கப்பட்டது. முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி உருவாக்கப்பட்ட இந்த தியாகச் சுவரை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இணைந்து திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்தவர்களைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற தியாகச் சுவர்கள் நிறுவப்படும் என மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “முதல்வர் மு.க. ஸ்டாலின் 2009ஆம் ஆண்டிலேயே தனது துணைவியார் துர்க்கா ஸ்டாலினுடன் இணைந்து உடல் தான உறுதிமொழியில் கையெழுத்திட்டார். உடல் உறுப்பு தானம் செய்யும் பண்பை தலைவரே முன்மாதிரியாக காட்டியுள்ளார். அந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும்,” என்றார். மேலும், “மன்னர்கள், நாயன்மார்கள் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்தது போல், இன்றைய அறிவியல் வளர்ச்சியால் ஒருவரின் உடல் உறுப்புகள் மற்றொருவருக்கு உயிர் கொடுக்கின்றன,” என அவர் குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கூறுகையில், “முதல்வர் ஸ்டாலின் அறிவித்த திட்டத்தின்படி, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் திருவுடலுக்கு அரசு சார்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகள் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதுவரை 253 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகளில் இத்தனை பேர் தானம் செய்திருப்பது இந்திய அளவில் தமிழ்நாட்டை முதலிடத்தில் நிறுத்தியுள்ளது. தற்போது 23,189 பேர் உடல் உறுப்பு தானம் பதிவு செய்துள்ளனர். இது இந்திய அளவிலேயே அல்லாமல் உலகளவிலும் பெருமை சேர்க்கும் சாதனையாகும்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!