கரூர் கூட்ட நெரிசலில் மனைவி, மகளை இழந்து தவிக்கும் டாஸ்மாக் ஊழியர்! 

 
 

கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை  ஏமூர்புதூர் கிராமத்தில் வசித்து வருபவர்  சக்திவேல். டாஸ்மாக் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 35 வயது பிரியதர்ஷினி. இவரது  மகள் தரணிகா. இருவரும்  விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.  இந்த கிராமத்தை சேர்ந்த மேலும் 3 பேரும் இதே சம்பவத்தில் பலியாகினர். இதனால் அந்த கிராமமே பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளது. தனது மனைவியும், மகளும் விஜய் பிரச்சார கூட்டத்திற்கு சென்று வெகுநேரம் ஆகியும் வராததால், சக்திவேல் தனது மனைவிக்கு செல்போன் மூலம் ‘வாய்ஸ் மெசேஜ்’ அனுப்பி உள்ளார். 

அதில் ‘விஜய் பிரச்சார கூட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக சொல்கிறார்கள். நீங்க சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுங்க. இவ்வளவு நேரம் பாப்பா (மகள்) எப்படி தாங்குவாள்’ எனக்  கூறி உள்ளார்.  இதற்கு பிரியதர்ஷினி, ‘விஜய் இன்னும் வரவில்லை. அவர் வந்ததும் பார்த்துவிட்டு வந்து விடுகிறோம். நீங்க போய் சாப்பிடுங்க மாமா. இங்கு டவர் கிடைப்பதே இல்லை’ என பதிலும்  அனுப்பி உள்ளார். 


பிரச்சார கூட்ட நெருக்கடியில் சிக்கி உயிர் இழப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் நடைபெற்ற இந்த செல்போன் உரையாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது கேட்போரின் நெஞ்சை உருக வைப்பதாக உள்ளது.  அதேநேரத்தில் ஒரே நாளில் தனது அன்பு மனைவியையும், ஆசை மகளையும் இழந்த சோகத்தில் தவித்து வரும் சக்திவேல், தனது இன்னொரு மகளையும் கடந்த சில மாதங்களுக்கு முன் இழந்தவர். ஒரே நேரத்தில்  ஒட்டுமொத்த குடும்பத்தையும் பறிகொடுத்து தவித்து வருகிறார்.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?