அக்டோபர் 2ம் தேதி  டாஸ்மாக் விடுமுறை... கலெக்டர் அதிரடி உத்தரவு! 

 


 
அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதனை  முன்னிட்டு சென்னையில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது; மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர்  ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அக்டோபர் 2ம் தேதி  காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை  சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். 

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது  மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?