தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு... இன்றே குவிந்த ‘குடி’மகன்கள்!

 

நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும், மதுபான பார் கூடங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஸ்டாக் வைப்பதற்காக இன்றே ‘குடி’மகன்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து வருகின்றனர். 

இந்த உத்தரவை மீறினால் மீறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் பல இடங்களில் ‘குடி’மகன்கள் பொறுப்புணர்வுடன் துணி பைகளைக் கொண்டு சென்று டாஸ்மாக் கடைகளில் வாங்கி இருப்பு வைத்துக் கொள்வதற்காக கொண்டு செல்வதைக் காண முடிந்தது. 

இது குறித்த சுற்றறிக்கையில், வரும் அக்டோபர் 2ம் தேதி அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A)/FL3(AA) முதல் FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையகங்கள்/மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். 

அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. மீறுபவர்கள் மீது மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?