இதப் பார்றா... தமிழகம் முழுவதும் கணினி மயமாகும் டாஸ்மாக் கடைகள்... அமைச்சர் திடீர் அறிவிப்பு!
தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் மதுபானங்கள் தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சமீபகாலமாக அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுப்பதற்காக அவ்வபோது டாஸ்மாக் அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதை தடுக்க கேரளா போன்ற கம்ப்யூட்டர் பில் முறையை கொண்டு வரலாம் டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. அதன்படி அடுத்து வரும் 2 மாதங்களுக்குள் தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பில்லிங் இயந்திரம் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் டாஸ்மாக் கடைகளிலோ பார்களிலோ தவறு நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் அக்டோபர் மாதத்திற்குள் முழுமையாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா