தாலியை கழற்றி விட்டு, கள்ளக்காதலனுடன் இளம்பெண் தற்கொலை முயற்சி!
திருமணமான இளம்பெண் தாலியை கழற்றி, கள்ளக்காதலனுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (27) டிரைவராக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சினேகா (24). இவர்களுக்கு 6 ஆண்டுகளாக திருமணமாகி, 5 வயது மகன் மற்றும் 4 வயது மகள் உள்ளனர். குடும்பம் தற்போது காளப்பநாயக்கன்பட்டி அருகே உள்ள 3-வது மைல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தது.
இந்நிலையில், நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கப்பலூத்தூ கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் அஜித் (22) தனது சித்தி தீபா வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது அஜித்துக்கும் சினேகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு இருவரும் வீடு விட்டு ஓடியதைத் தொடர்ந்து, போலீசார் இருவரையும் தேடி மீட்டுக் கொண்டு வந்து சமாதானம் செய்து அனுப்பியிருந்தனர்.
அதன்பின் சினேகா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் மீண்டும் வாழ்ந்தாலும், உறவு சீராகவில்லை. கடந்த இரவு திருநள்ளாறு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு, அதிகாலை வீடு திரும்பிய போது சினேகா தாலியை கழற்றி வைத்துவிட்டு மாயமானார்.
இதையடுத்து இன்று அதிகாலை ராசிபுரம் அருகே உள்ள காட்டில் சினேகாவும் அஜித்தும் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர். அங்கு பூ எடுக்கச் சென்ற அஜித்தின் தந்தை கந்தசாமி இருவரையும் கண்டதும் அதிர்ச்சி அடைந்து உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தார்.
போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்று, இருவரையும் மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் காளப்பநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!