undefined

சிறந்த கால்பந்து வீரருக்கான தங்கப்பந்து விருது வென்ற டெம்ப்லே!  

 

கால்பந்து உலகின் மிக உயரிய விருதான பலோன் டி 'ஓர் விருதை பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்று சாதனை படைத்துள்ளார். கால்பந்து உலகின் உயரிய  வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு வருடமும்  பிபா வழங்கி வருகிறது. 1956ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலில் 60 பேர் அதாவது 30 ஆண் மற்றும் 30 பெண்  இடம் பெற்றிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை 28 வயதான பிரான்ஸ் வீரர் டெம்பலே வென்றார். 

கிளப் போட்டிகளில் பிஎஸ்ஜி அணிக்காக 2024-25 சீசனில் சிறந்த ஆட்டத்தை டெம்பலே வெளிப்படுத்தினார். 53 போட்டிகளில் 35 கோல்களை அவர் கடந்த சீசனில் பதிவு செய்துள்ளார். சிறந்த கால்பந்து வீராங்கனைக்கான பலோன் டி 'ஓர் விருதை ஸ்பெயினின் அடனா பொன்மதி வென்று சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து 3 வது ஆண்டாக அவர் விருது பெற்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?