undefined

 சென்னையில்    குடிநீர் விநியோகம் தற்காலிக நிறுத்தம்! 

 
 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பராமரிப்பு பணிகளினால், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு மண்டலங்களில் குடிநீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள ஆர்.கே. சாலை மற்றும் ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நவம்பர் 9ம் தேதி காலை 10 மணி முதல் நவம்பர் 10ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.

இதன் காரணமாக தேனாம்பேட்டை – சூளைமேடு, வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், தி.நகர், கோபாலபுரம், சி.ஐ.டி. காலனி, மயிலாப்பூர், வடபழனி, மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை, சிஐடி நகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வழங்கல் பாதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அவசரத் தேவைகளுக்காக லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவு செய்யலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான இடங்களுக்கு லாரி மூலம் வழக்கம்போல் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும், இதற்கான தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!