undefined

காஸாவில் மீண்டும் வெடித்தது பதற்றம்... இஸ்ரேல் தாக்குதலில் பலர் பலி! 

 

 

காஸாவில் அமல்படுத்தப்பட்டிருந்த அமைதி ஒப்பந்தத்தை மீறி, இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல்களில் குழந்தைகள், பத்திரிகையாளர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், உலக நாடுகள் அனுப்பிய மனிதாபிமான நிவாரணப் பொருட்களை பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த அக்டோபர் 10 அன்று அமெரிக்காவின் தலையீட்டில் காஸாவில் அமல்படுத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை மீறியது ஹமாஸ் தான் என இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் படையினரின் புதிய தாக்குதல்களில் இஸ்ரேல் வீரர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பதிலடி நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை (அக். 19) இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களில் குறைந்தது 45 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்; அதில் பெரும்பாலானோர் குழந்தைகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என கூறப்படுகிறது. நிலைமை மோசமடைந்துள்ளதால், அமெரிக்கா தனது பிரதிநிதிகளை இஸ்ரேலுக்கு அனுப்பி, காஸா அமைதி ஒப்பந்தத்தை மீண்டும் அமல்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!