undefined

இந்திய தூதுவராக நடிகை தமன்னா நியமனம்.. ரசிகர்கள் வாழ்த்து மழை!!

 

ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் நடிகை தமன்னா மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இந்த படத்தில் அவருடைய நடன அசைவில்  ‘காவாலா’ பாடல் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்தது. தற்போது பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக வலம் வரும் தமன்னா, சில பிராண்ட்களின் விளம்பரத் தூதுவராகவும் இருந்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது அவர் ஜப்பானின் ஷிசேடோ என்னும் அழகுசாதன நிறுவனத்தின் முதல் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் ” அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து கொள்ளதான் இத்தனை நாட்கள் காத்திருந்தேன். இந்தியாவில் ஷிசேடோவின் (shiseido) முதல் பிராண்ட் தூதராக இருப்பதில் பெருமை அடைகிறேன்.  பொதுவாக அழகு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல, தங்கள் சொந்த மேனியின் நிறத்தில் தன்னம்பிக்கை பெறுவது எனவே நம்புகிறேன். ஷிசேடோவின் ஸ்கின் கேர் குடும்பத்தில் இணைவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

அவருடைய ரசிகர்கள் பலரும் ’காவாலா’ புகழ்தான் தமன்னாவை இந்த உயரத்திற்கு கொண்டு போயிள்ளது என்கின்றனர். அத்துடன்  ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும்  தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!