பகீர் வீடியோ... போரை நிறுத்துங்க.... இஸ்ரேல் தூதரகம் முன்பு தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர்!!
வாஷிங்டனில் இஸ்ரேல் தூதரகத்திற்கு வெளியே அமெரிக்க விமானப்படை உறுப்பினர் ஆரோன் புஷ்னெல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவரது பதவி மற்றும் அடையாளம் குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவித்ததால் தனது எதிர்ப்பை தெரிவிக்க அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வீடியோவில் அவர் தனது பெயர் ஆரோன் புஷ்னெல் எனக் கூறியுள்ளார் . அமெரிக்க சீருடை அணிந்த அதிகாரி இஸ்ரேலிய தூதரக வாசலில் வெளியே நின்று தன்னை அமெரிக்க விமானப்படை உறுப்பினர் எனக் கூறுகிறார். மேலும் “இனி நான் இனப்படுகொலைக்கு காசாவில் உடந்தையாக இருக்க மாட்டேன். நான் ஒரு தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளேன்," எனக் கூறிவிட்டு அவர் தீக்குளிக்கிறார்.
டிசம்பரில், அட்லாண்டாவில் இதே போல் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே ஒரு எதிர்ப்பாளர் தீக்குளித்தார் இந்த தீக்குளிப்பு சம்பவத்தை தொடர்ந்து இஸ்ரேல் தூதரகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டு உள்ளது.இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசாவில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 30000க்கும் அதிகம். இதில் ஆயிரக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளனர் என ஹமாஸ் ஆதரவு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இராணுவத்தில் 200 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!