undefined

சாக்கு மூட்டையில் கிடந்த கர்ப்பிணி பெண்.. துண்டு துண்டாக வெட்டப்பட்டிருந்த உடல்!

 

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹோ மாவட்டத்தில் உள்ள சதாத் நகரில் சாலையோரம் இளம்பெண்ணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சதாத் நகரில் சாலையோரம் சந்தேகத்திற்கிடமான சாக்கு பைகள் கிடப்பது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு சாக்கு மூட்டைகளையும் பிரித்தனர்.

இளம் பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அந்தரங்க உறுப்புகள், கால்கள், கைகள் வெட்டப்பட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து தடயவியல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர், உடல் உறுப்புகளை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், சதாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் தெரியாத அளவுக்கு மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டி உள்ளனர். இறந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பிரேத பரிசோதனையில் இறந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பெண்ணுக்கு 20 முதல் 23 வயது இருக்கும். இதுகுறித்து விசாரித்து வருகிறோம். யாரும் கைது செய்யப்படவில்லை” என்றார்.

முன்னதாக மும்பையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை நலசோபரா பகுதியை சேர்ந்த சிடல் சாவந்த் (29) என்பவர் கொன்றார். இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், அவர்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், ஆத்திரத்தில், காதலியின் கழுத்தை அறுத்து, கால்வாயில் வீசிவிட்டு தலைமறைவானார். இதுகுறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!