புத்தகக் கண்காட்சி நாளையுடன் நிறைவு.. காலையிலேயே குவியத் தொடங்கிய வாசகர்கள்... !
சென்னையில் ஜனவரி 3ம் தேதி தொடங்கிய 47வது புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவு பெற உள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜனவரி 3ம் தேதி தொடங்கிய சென்னையின் 47வது புத்தக கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் நடைபெறும் இந்த புத்தக திருவிழாவிற்கு வாசகர்கள், புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் என இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகை தருவார்கள்.
இந்த புத்தக கண்காட்சியில் 900க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தினந்தோறும் வார நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும். அதே போன்று விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் கண்காட்சி தொடங்கி விடும். மொத்தம் 19 நாட்கள் நடைபெற உள்ள புத்தகக் கண்காட்சியில் தினமும் மாலை வேளையில் கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
கொட்டும் மழையிலும் புத்தகங்கள் வாங்க ஆர்வமாக வாசகர்கள் குவிந்தனர். ஜனவரி 8ம் தேதி மழைநீர் தேங்கியதால் புத்தகக் கண்காட்சிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புத்தக கண்காட்சி விழா அரங்கில் தினமும் மாலையிலும் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைச்சிறந்த அறிஞர்கள், எழுத்தாளர்களின் உரைவீச்சுக்கள் இடம் பெறுகின்றன. அறிவுக்கடலாக பெறும் எதிர்பார்ப்புடன் இந்த புத்தக திருவிழாவிற்கு வாசகர்கள் வருகை தந்தனர்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க