undefined

பெரும் அதிர்ச்சி.. வயதான தாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற கொடூர மகன்!

 

கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே உள்ள ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், சம்பவத்தன்று மூதாட்டி வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூத்த மகன் அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் திடீரென மூத்த மகன் அங்குள்ள ஒரு குழிக்குள் தாயை தள்ளிவிட்டார்.

அப்போது அங்கு கிடந்த கட்டையை எடுத்து தாயை மிரட்டி விட்டு சென்றார். மேலும், மகன் தாக்கியதில் படுகாயம் அடைந்த மூதாட்டி குளித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகனுக்கும் தாய்க்கும் இடையே நடந்த சம்பவத்தை இளைய மருமகள் தட்டிக்கேட்டுள்ளார். பின் நடந்த சம்பத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெற்ற தாயை தாக்கி குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!