மரண ஓலம்... தான்சானியா தேர்தல் வன்முறையில் 700 பேர் பலி!
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் தேர்தல் முடிவைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் 700 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டில் கடந்த அக்டோபர் 29ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் சாமியா சுலுஹூ ஹாசன் மீண்டும் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் தேர்தல் முறைகேடு நடந்ததாக குற்றஞ்சாட்டி நாடு முழுவதும் போராட்டத்தை ஆரம்பித்தன.
தொடர்ந்து அந்தப் போராட்டம் பல்வேறு நகரங்களில் வன்முறையாக மாறிய நிலையில், போலீசார் கண்ணீர்க்காசு வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். பல இடங்களில் அரசு கட்டடங்கள், வாகனங்கள் தீக்கிரையாகின. போராட்டக்காரர்களும் பாதுகாப்பு படையினரிடமும் கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த வன்முறையில் சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான பதேமா கட்சி தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருக்கலாம் என்றும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறை வட்டாரங்களும் உயிரிழப்பு எண்ணிக்கை “நூற்றுக்கணக்கில் இருக்கலாம்” என உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல மருத்துவமனைகள் துல்லியமான எண்ணிக்கையை வெளியிட மறுத்துள்ளதால், உயிரிழப்பு விவரம் குறித்து குழப்பம் நிலவுகிறது.
அந்நாட்டு அரசு தற்போது அவசரநிலை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பெரும்பாலான நகரங்களில் இரவு நேர ஊரடங்கை அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!