தொடரும் வீழ்ச்சி.. 6,600 பேரை பணிநீக்கம் செய்கிறது டெல் நிறுவனம் !!

 

பொருளாதார நெருக்கடி காரணமாக, மைக்ரோசாஃப்ட் முதல் அமேசான் வரை பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனன. அந்த வரிசையில் கணிப்பொறி சந்தையில் முன்னணி இடம் வகித்துவரும் டெல் நிறுவனமும் டெல் நிறுவனமும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க உள்ளது. 

டெல் நிறுவனம் 6,650 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 5 சதவீதம் பேர் ஆவர். 

பணி நீக்கம் தொடர்பாக தொழிலாளர்களுக்கு டெல் நிறுவனத்தின் இணை தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் கிளார்க் எழுதியுள்ள கடிதத்தில், தற்போதைய சூழலில் எதிர்காலம் குறித்த கேள்வி எழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணத்தைக் குறைப்பது, ஆட்கள் தேர்வை நிறுத்துவது போன்ற ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என்பதால், ஆட்குறைப்பில் ஈடுபடுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தனிநபர் கம்ப்யூட்டர்களுக்கான தேவை குறைந்து வருகிறது. இதனால், நிறுவனத்தின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நிச்சயமற்ற சந்தை சூழல், அதிகரித்து வரும் நிதிச் சுமை ஆகியவற்றை கருத்தில் கொண்டு 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  

நடப்பு நிதியாண்டின் கடைசி காலாண்டில் டெல் நிறுவனத்தின் கணிப்பொறி விற்பனை கடந்த ஆண்டைவிட 37 சதவீதம் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஹெச்பி, சிஸ்கோ சிஸ்டம்ஸ் போன்றவையும் ஆட்குறைப்பில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த தொழில் அதிக லாபம் தரும்