பீகார் தேர்தல் முதல் கட்டப் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவு!
பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (நவம்பர் 6) நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இந்தத் தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ராஷ்டீரிய ஜனதா தளம் – காங்கிரஸ் தலைமையிலான இந்தியா (மகாகத்பந்தன்) கூட்டணியும் கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி, ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஆனால் முக்கியமான மோதல் தே.ஜ. மற்றும் இந்தியா கூட்டணிகளுக்கு இடையிலேயே நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் கடந்த சில நாட்களாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையம் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி, வாக்கு இயந்திரங்களை வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளை தொடங்கியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!